ஒன்றிலிருந்து அறுபதுவரை எண்ணுபவன் யார் ?
ஓயாது மூன்று பேராய் சொல்லுபவன் யார் ? http://www.youtube.com/watch?v=cF0DQsuHRF4
மாமா நீ குழலூதென்று கேட்பவன் யார்?
நாராயணன் புகழ் பாட சொல்பவன் யார்?
ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் நாமம் நவின்று
தமிழ் ஆங்கிலம் சமஸ்க்ரிதம் அனைத்தும் பயின்று
எங்கள் ஆழிமழை கண்ணா நீ தானடா
விண்கள் வெல்லும் எங்கள் வேந்தன் நீ தானடா
தாயின் மூலம் அன்பு கற்று
தந்தை மூலம் பண்பு கற்று
பாட்டியின் மூலம் பாசம் கற்று
பாட்டனர் மூலம் பொறுமை கற்று
உடையவர் சொன்ன நெறியை பற்று
என்று தான் நான் உன்னை காண வருவேன்
அன்று தான் உன்னை தூக்கி முத்தங்கள் தருவேன்